நெல்லையில் ரெயில்வே பாலம் பராமரிப்பு பணி:திருச்செந்தூர் ரெயில்கள் ரத்து
நெல்லையில் ரெயில்வே பாலம் பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை ரெயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரெயில் பாலம் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்களான, நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (06675), திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06680) ஆகியவை இன்று (புதன்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அதே போன்று பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் இன்று (புதன்கிழமை) பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டும் இயக்கப்படுகிறது. திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் திருச்செந்தூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு செல்லும். மேலும் மாலை 4.15 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.