தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சாவு

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி இறந்தார்.

Update: 2022-10-11 19:59 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரையபுரத்தில் தண்டவாளத்தை சம்பவத்தன்று 45 வயது ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், கும்பகோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்