ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் ரெய்டு - ரூ.3 லட்சம் பறிமுதல்

முதன்மை கல்வி அலுவலர் ராமனின் பதவிக்காலம் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

Update: 2023-11-08 05:38 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக செயல்பட்டு வந்தவர் ராமன். இவரது பதவிக்காலம் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். பணிக்காலத்தில் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ராமன் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக ராமனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த சோதனையில் 13 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்