ராகுல்காந்தி நடைபயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...!

ராகுல்காந்தியின் 'இந்தியா ஒற்றுமை யாத்திரை' நடைபயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-08-28 14:39 GMT

சென்னை,

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்தியா ஒற்றுமை யாத்திரை' நடைபயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ளார். வருகிற செப்.7-ம் தேதி தொடங்க உள்ள நடைபயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி ஜெயக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், இந்திய அரசியல் சட்டத்தை பாதுக்காக்க ராகுல் காந்தி மக்கள் இடம் சென்று அதை எடுத்து சொல்ல இருக்கிறார். நாங்கள் இந்த அரசை பாதுகாக்க விரும்புகிறோம் அது எங்கள் கடமை. சமூக நீதிக்கு இன்று பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்