பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை- சீமான்

பிரதமர் மோடியை எதிர்க்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை.என சீமான் கூறினார்.

Update: 2022-09-09 13:56 GMT

மதுரை,

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது ;

உசிலம்பட்டி மக்களுடைய நீண்டநாள் கோரிக்கை, 58 கிராமங்கள் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதுதான், இதை நாம் தமிழர் கட்சி இதை பலமுறை கோரிக்கையாக வைத்துவிட்டது, ஆனால் இதற்கு மேல் அரசுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை, கால்வாய்களை திறப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறும்.

முதல் அமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். அவர் என்னவாக பாடுபடுகிறார்.முதல் அமைச்சர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும்.80 சதவீத பிரச்சனைகளை, தீர்த்து வைத்ததாக முதலமைச்சர் தெரிவித்து வரும் நிலையில், 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா என்பது தான் கேள்வி என்றார்.

இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டு வராத ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு மாற்றம் கொண்டு வருவாரா? என்ன மாற்றம் வரப்போகிறது. காலையும், மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம். மோடியை எதிர்க்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை.என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்