கண்ணபிரான் போன்று ராகுல்காந்தி புதிய அவதராரம் எடுத்து பா.ஜ.கவுக்கு எதிராக போராடி வருகிறார் - கே.எஸ்.அழகிரி

உதய் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு பொருளாதார ரீதியாக தொல்லை தருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Update: 2022-08-19 13:53 GMT

சென்னை,

இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரை தொடங்க இருக்கிறார்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 2-வது நாளாக இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தை தொடர்ந்து மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மின் வினியோகம், மின்சார கொள்முதல் பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பொருளாதார ரீதியான சிரமத்தை கொடுப்பதற்காக பா.ஜ.க. உதய் திட்டத்தை பெரிதுபடுத்துகிறது. உதய் திட்டத்தை அலுவல் ரீதியான சீர்திருத்தம் என்று ஆரம்பித்து மின் கட்டணத்தை மக்கள் மத்தியில் திணிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இலவச மின்சாரம் தவறு என்று பிரதமர் கூறுவது மிகவும் தவறான ஒன்று. விவசாயம், கல்வி போன்ற துறைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் என்பது ஒருவகையான முதலீடு தான். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கு செய்யப்படும் செலவு என்பது அத்தியாவசியமானது.

கண்ணபிரான் போன்று ராகுல்காந்தி புதிய அவதராரம் எடுத்து பா.ஜ.க. அதிகாரத்திற்கு எதிராக போராடி வருகிறார். செப்டம்பர் 7-ந்தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள நடைபயணத்தில் பங்கேற்க இருக்கிறார். பா.ஜ.க. அரசின் ஜனநாயக துரோக செயலுக்கு எதிராகவும், அதிகாரத்தில் உள்ளவர்களின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து இந்த பேரணி நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்