உதகையில் தோடர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி: வீடியோ

உதகையில் தோடர் இன மக்கள் உடையணிந்து அவர்களுடன் ராகுல் காந்தி நடனமாடினார்.;

Update: 2023-08-12 13:49 GMT

உதகை,

காங்கிரஸ் எம்பி. ராகுல்காந்தி, தனது தொகுதியான வயநாட்டை பார்வையிட செல்வதற்காக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு செல்லும் வழியில் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்தார்.

இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9.15 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, ராகுல் காந்தி ஊட்டி அருகே முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், தோடர் இன மக்கள் உடையணிந்து அவர்களுடன் ராகுல் காந்தி நடனமாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தொடர்ந்து அவர், கூடலூா் வழியாக கேரள மாநிலம் வயநாடு சென்றாா். 

Tags:    

மேலும் செய்திகள்