ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

காரைக்குடியில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-06-19 18:45 GMT

காரைக்குடியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தியின் 53-வது பிறந்த நாளை முன்னிட்டு அருணா நகரில் உள்ள தாயுமானவர் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து காரைக்குடியில் உள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கேக் வெட்டி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட துணைத்தலைவர் காந்தி, ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், மாநில வக்கீல் பிரிவு மாநில துணைச்செயலாளர் ராமநாதன், மாவட்டச் செயலாளர் அப்பாவு ராமசாமி, நகராட்சி கவுன்சிலர் அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்