பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா

பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது.

Update: 2023-10-08 21:38 GMT

பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது.

கோபி

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன.

இதில் கோபி, கரட்டூர், வேட்டைக்காரன்கோவில், நல்லகவுண்டன்பாளையம், பாரியூர், நஞ்சகவுண்டன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடுமுடி

இதேபோல் கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணி அளவில் கலச பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கூகலூர்

கோபி அருகே கூகலூரில் மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ராகு கேதுவுக்கு பால், தயிர், எலுமிச்சை பழம், விபூதி, சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்