நாகநாத சாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா

நாகை மற்றும் நாகூர் நாகநாத சாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-10-08 18:45 GMT


நாகை மற்றும் நாகூர் நாகநாத சாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராகு, கேது பெயர்ச்சி

ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் நேற்று மதியம் 3.40 மணிக்கு பிரவேசித்தனர். இதையடுத்து ராகு, கேதுவுக்கு தனி சன்னதி கொண்டுள்ள நாகை அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீ நாகநாத சாமி கோவிலிலும், நாகூர் திருநாகவல்லி சமேத நாகநாத சாமி கோவிலிலும் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு ராகு, கேது பகவானுக்கு பரிகார சாந்தி ஹோமங்கள் மற்றும் மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகாரங்கள் செய்து வழிபட்டனர்.

பரிகாரங்கள் செய்து வழிபாடு

அதேபோல் நாகை அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், மலையீஸ்வரன் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், அந்தனப்பேட்டை அண்ணாமலையார் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி மற்றும் பரிகாரங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்