ராதாகல்யாண உற்சவம்

சீர்காழியில் ராதாகல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

Update: 2022-12-18 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள விஸ்வநாத சுவாமி கோவிலில் ராதாகல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, குரு கீர்த்தனை தொடங்கியது. தொடர்ந்து சம்பிரதாய திவ்யநாமம், மாங்கல்ய தாரணம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற்றது.

பின்னர் தேப்பெருமாநல்லூர் நரசிம்மன் பாகவதர் குழுவினர் ராதா கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தனர். இதில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்