சிவகங்கை அருகே ஈசனூர் கிராமத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் பெருமாள்பட்டி- திருப்பத்தூர் பைபாஸ் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 42 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாடு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் மற்றும் கடம்பூர் கருநாகராஜா வண்டியும், 2- வது பரிசை வைரிவயல் வீரமுனியாண்டவர் மற்றும் பொன்பேத்தி மருபாண்டிய வல்லாத்தேவர் வண்டியும், 3-வது பரிசை பட்டங்காடு அடைக்கலம் மற்றும் ஈசனூர் கண்ணன் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 29 வண்டிகள் கலந்து கொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை அதிகரை வேங்கை மற்றும் ஈசனூர் கார்மேகம் வண்டியும், 2-வது பரிசை கரையப்பட்டி துரைராஜ் மற்றும் மணமேல்குடி நண்பன் கோழிப்பண்ணை வண்டியும், 3-வது பரிசை தல்லாம்பட்டி மங்கையர்க்கரசி வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை ஈசனூர் பி.ஆர்.டி. மன்னன் மற்றும் பூக்கொல்லை ரித்திஷ்வரன் வண்டியும், 2-வது பரிசை அறந்தாங்கி பொற்பனைகோட்டை முனீஸ்வரன் வண்டியும், 3-வது பரிசை சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.