சிவகங்கை அருகே நாலுகோட்டை அதிகுந்தவரத அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நாலுகோட்டை-சோழபுரம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 23 வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக போட்டி நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை நாலுகோட்டை ஊராட்சிதலைவர் மணிகண்டன் மற்றும் ஒக்கூர் அண்ணாநகர் கணேஷ் போர்வெல் வண்டியும், 2-வது பரிசை மட்டங்கிப்பட்டி காவ்யா மற்றும் ஒக்கூர் அண்ணாநகர் எம்.ஜி.ஆர். போர்வெல் ரத்தினராஜா வண்டியும், 3-வது பரிசை அவனியாபுரம் மோகன் மற்றும் கோட்டணத்தாம்பட்டி ரவி வண்டியும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஏரியூர் பெத்தாச்சி அம்பலம் மற்றும் நல்லாங்குடி சசிகுமார் வண்டியும், 2-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும், 3-வது பரிசை தூத்துக்குடி சண்முகபுரம் விஜயகுமார் மற்றும் சிவகங்கை புதுப்பட்டி சிவா வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.