வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி

உலக ரேபிஸ் தினத்தையொட்டி வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2022-09-28 18:45 GMT

கூடலூர், 

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கூடலூரில் உலக ரேபிஸ் தினத்தையொட்டி வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இயற்கை பாதுகாப்பு மைய கால்நடை டாக்டர்கள் சுகுமாரன், பாரத் ஜோதி ஆகியோர் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:- வீடுகளில் நாய்கள் வளர்க்கும் போது அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தெருக்களில் விடக்கூடாது. அவ்வாறு விட்டால் ரேபிஸ் நோய் அறிகுறி மற்றும் தாக்குதல் இருக்கும் பிற வளர்ப்பு பிராணிகள் மூலம் பரவுகிறது. கூடலூர், முதுமலை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு நோய் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் வெறிநாய் (ரேபிஸ்) பரவி உள்ளது. பாதிக்கப்பட்ட மிருகங்களின் உமிழ்நீர் மூலம் ரேபிஸ் பரவுகிறது. எனவே, வீடுகள் மற்றும் தெருக்களில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்