நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்

நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2022-09-29 19:14 GMT

உலக வெறிநோய் தினத்தினை முன்னிட்டு நொய்யல் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் உஷா தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தினர். மேலும் அனைத்து நாய்களுக்கும் குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டன. தடுப்பூசி போடப்பட்டதற்கான செல்லப்பிராணிகள் நல அட்டைகளை வழங்கினார்கள்.

இதேபோல் எலவனூர் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் தட்சிணாமூர்த்தி கலந்துகொண்டு வெறி நோயின் தாக்கம் குறித்து விளக்கி பேசினார். கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் எலவனூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்