கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புகழூர் நகராட்சியில் உள்ள சந்தை வளாகத்தில் செல்ல பிராணியான நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் லில்லி அருள்குமாரி தலைமை தாங்கினார். முகாமை புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர்கள் கலந்து கொண்டு, செல்லப் பிராணியான 148 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டனர். மதியம் ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப் பள்ளியில் வெறிநோய் குறித்த சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. முகாமில், புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.