ஓசூரில் வெறிநாய் கடித்து 7 பேர் காயம்

Update: 2023-06-27 19:45 GMT

ஓசூர்

ஓசூர் பாலாஜி நகர் 3-வது கிராஸ் பகுதியில், நேற்று மாலை சாலையோரமாக நின்ற வெறிநாய் ஒன்று சாலையில் சென்றவர்களை கடித்து குதறியது. இதில் பள்ளி மாணவி, சிறுவன், தபால் ஊழியர், முன்னாள் கவுன்சிலர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்