துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி
துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி நடந்தது.;
காளையார்கோவில்,
காளையார்கோவில் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி, வினா போட்டி காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் கிளை தலைவர் வீரபாண்டி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், ரோட்டரி சங்க தலைவர் பாண்டிக்கண்ணு முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணை தலைவர் சேவற்கொடியோன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். தமிழ் வழியிலும், ஆங்கில வழியிலும் இளநிலை, உயர்நிலை, முதுநிலை என்ற மூன்று பிரிவுகளில் நடைபெற்ற வினாடி, வினா போட்டியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆனந்தி தொடங்கி வைத்தார். காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்களையும், சான்றிதழ்களையும் பரிசாக வழங்கினார்கள். இதில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சாலமன் நன்றி கூறினார்.