வினாடி-வினா போட்டி

வினாடி-வினா போட்டி

Update: 2022-10-20 18:45 GMT

திருச்சுழி

திருச்சுழியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒன்றிய அளவிலான துளிர் வினாடி, வினா போட்டி நடைபெற்றது. இதில் திருச்சுழி ஒன்றியத்தை சேர்ந்த 42 பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வினாடி-வினா போட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சுழி ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி, வேடநத்தம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், நரிக்குடி ஒருங்கிணைப்பாளர் சங்க துளிர் பெண்கள் மேம்பாட்டு நிர்வாகி வெங்கடேஸ்வரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செல்லத்துரை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடக்கும் வினாடி-வினா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ-மாணவிகள் அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பாராட்டுகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்