பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Update: 2022-09-16 09:55 GMT

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்