நெல்லை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் - ஐகோர்ட்டு கிளை உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது;

Update: 2022-08-12 07:09 GMT

மதுரை,

நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .

மேலும் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

விதிமீறல் குவாரிகளுக்கு ரூ.300 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு மதுரை உத்தரவிட்டுள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்