சென்னையில் கோவில் திருவிழாவின் போது தகராறு - நாட்டு வெடிகுண்டு வீச்சில் 4 பேர் காயம்...!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் முன் விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீச்சு.

Update: 2022-08-20 06:36 GMT

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது அப்பகுதியை சேர்ந்த இரண்டு குழுவினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியா நேற்று இரவு ஒரு குழுவினர் மீது மற்றொரு குழுவினர் நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது காயம் அடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 20 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்