அவினாசி
தமிழ்நாடு மின்உற்பத்தி அவினாசி பகிர்மான வட்டம் சார்பில் மின்சாரம் குறித்து விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நேற்று மாலைநடந்தது. அவினாசி ஆட்டையாம்பாளையத்திலுள்ள ஒரு மண்டபத்தில் நடந்த கருத்தங்கிற்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் பரஞ்சோதி வரவேற்றார். செயற்பொறியாளர்கள் சுமதி, ராஜகுமாரி, கலைச்செல்வி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அவினாசி வட்டாரத்தை சேர்ந்த திரளான விவசாயிகள் கலநது கொண்டனர். மேற்பார்வை பொறியாளர் ராஜாமணி (ஓய்வு), உதவி பொறியாளர் முரளிதரன் ஆகியோர் பேசுகையில், மின்சார வயர், சுவிட்ச் பல்பு உள்ளிட்ட மின்சாதன பொருட்களை ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமானதாக பார்த்து வாங்கவேண்டும். இதனால் மின் செலவு குறைவதுடன் மின்கசிவு, சாக் அடித்தல் போன்றவற்றை தவிர்க்கலாம். மின்மோட்டார்களில் எதனால் பழுது வருகிறது அதை எப்படி பராமரிப்பது குறித்து விளக்கமளித்தனர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் எல்.இ.டி. பல்பு, மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்ட.து.