மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான உபகரணங்களை வழங்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான உபகரணங்களை வழங்க வேண்டும் என்று சங்க நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-03-16 19:00 GMT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங் இடையக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் பலர், உபகரணங்கள் இல்லாமல் வெளியில் நடமாட முடியாது. இத்தகைய உபகரணங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் மூலம் வழங்கிய உபகரணங்கள் தரமற்றதாக உள்ளது. குறிப்பாக ஊன்றுகோல் உடைந்து விடுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு, பழனியை சேர்ந்த அய்யனார் என்னும் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட ஊன்றுகோல் ஒரே வாரத்தில் உடைந்து விட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்