உள்ளாட்சி அமைப்பு சேவைகள் பெற கியூஆர் ஸ்கேன் வசதி
உள்ளாட்சி அமைப்பு சேவைகள் பெற கியூஆர் ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது.;
தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளை பெறவும், புகார்களை தெரிவிக்கவும் டிஜிட்டல் மயமாக்கும் ஏற்பாடுகள் இப்போது நடந்து வருகின்றன. அந்தவகையில் கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், சொத்துவரி, குடிநீர் வரி, கடை வாடகை ஆகியவற்றை செலுத்தவும், உரிமம் பெறுவதற்கும், உரிமம் புதுப்பிக்கவும் காலதாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு கியூஆர் ஸ்கேன் செய்வதன் மூலமாக உடனடியாக சேவைகளை பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதை நடைமுறைப்படுத்தும் வகையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கியூஆர் கோடு ஒட்டும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.