ஷூ கம்பெனி குடோனில் மலைப்பாம்பு மீட்பு

பேரணாம்பட்டு அருகே ஷூ கம்பெனி குடோனில் மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2023-10-02 17:23 GMT

பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் வசிக்கும் மேகநாதன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பம்புசெட் பின்புறம் கோழியை முழங்கிய நிலையில் 7 அடி நீள நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து சீறியது. இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனவர் தயாளன் மற்றும் வனத்துறையினர் பிடித்து மோர்தானா காப்புக்காடு கோட்டையூர் வனப்பகுதியில் விட்டனர்.

பேரணாம்பட்டு அருகே உள்ள பங்களாமேடு பகுதியில் ரேஷன் கடை அருகில் தனியார் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. நேற்று மாலை ஷூ கம்பெனி குடோன் பகுதியில் மண்டி கிடந்த புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் தொழிலாளர்கள் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறை மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனவர் தயாளன் மற்றும் வனத்துறையினர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து பேரணாம்பட்டு அரவட்லா வனப் பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்