வலையில் சிக்கிய மலைப்பாம்பு

கண்மாயில் மீன் பிடித்தபோது வலையில் மலைப்பாம்பு சிக்கியது.;

Update: 2022-11-19 16:28 GMT

நத்தம் அருகே நடுவனூரில் உள்ள கண்மாயில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வலைவீசி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வலையில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. இதனைக்கண்டு மீன் பிடித்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வலையில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த பாம்பு, கரந்தமலை வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்