குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நுழையும் மலைப்பாம்புகள் பொதுமக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நுழையும் மலைப்பாம்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2023-01-23 18:45 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ளது கரிசல்பட்டி கிராமம். இதற்கு அருகில் நல்லியம்பட்டி குட்டு என அழைக்கப்படும் மலைப்பகுதி உள்ளது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா். பின்னா் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து மலைப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இந்த நிலையில் மீண்டும் அப்பகுதியில் சுமார் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு நுழைந்துள்ளது. இதையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தொிவித்தனா். வனத்துறையினா் அந்த பாம்பை மலைப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நுழையும் மலைப்பாம்புகளால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்