மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள இருமத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்த படி கடந்து கொண்டிருந்தது. இந்த மலைப்பாம்பு தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள மீன் கடை ஒன்றை நோக்கி சென்றது. இதை கவனித்த அந்த பகுதி பொதுமக்கள், மலைப்பாம்பு வாகனங்களில் அடிபடாமல் இருக்க அதனை உடனடியாக பிடித்தனர். பின்னர் அதை தென்பெண்ணை ஆற்று பகுதியில் விட்டனர். மலைப்பாம்பு ஏதோ உயிரினத்தை விழுங்கியதால், மெதுவாக ஊர்ந்து சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.