மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவாளவாடி, வடபூதிநத்தம், ராகல்பாவி ஆகிய ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான சி.மகேந்திரன் கலந்து கொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்தில் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் உடுமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செழியன், மாவட்ட பாசறை செயலாளர் காமாட்சி சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரியவாளவாடி தேவராஜ், ராகல்பாவி சுமதி செழியன், ஆர்.வேலூர் அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.