பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து நகையை பறிக்க முயற்சி

பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து நகையை பறிக்க முயற்சி நடந்தது.

Update: 2023-01-10 18:45 GMT

சிக்கல்:

நாகை மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன். (வயது 39). நேற்று முன்தினம் இரவு நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு தனது மனைவி ஷாமிலி மற்றும் குழந்தையோடு நாகையில் இருந்து அழிஞ்சமங்கலம் சாலை வழியாக சங்கமங்லத்திற்குமோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சங்கமங்கலம் சட்ரஸ் அருகே சென்று பின் தொடர்ந்து மொபட்டில் வந்த மர்ம நபர், ராஜ்மோகனை வழிமறித்து அவரது மனைவி கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த தங்க சங்கலியை தருமாறு மிரட்டி உள்ளார். உடனே ராஜ்மோகன் மர்ம நபரை தள்ளிவிட்டு கூச்சல் போட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் ராஜ்மோகனை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் ராஜ்மோகனுக்கு 2 கைகளிலும் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து ராஜ்மோகனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்