தி.மு.க.- பா.ஜ.க.வினர் இடையே தள்ளுமுள்ளு

ஜோலார்பேட்டை ரெயில்நிலைத்தில் நடந்த விழாவில் தி.மு.க.- பா.ஜ.க.வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2023-07-09 18:32 GMT

சதாப்தி எக்ஸ்பிரஸ்

சென்னை எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் திருவண்ணாமலை தொகுதி அண்ணாதுரை எம்.பி. பாராளுமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்நின்று ெசல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து நேற்று இரவு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தள்ளு முள்ளு

இரவு 8.15 மணிக்கு வந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில்நிலைத்தில் நின்று 8.18 மணியளவில் பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அப்போது அண்ணாதுரை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி மலர் தூவி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழா மேடையில் குறைந்தளவு நாற்காலிகள் போடப்பட்டது. இதனால் முதலில் வந்த தி.மு.க.வினர் மேடையில் அமர்ந்திருந்தனர். அதன் பிறகு வந்த பா.ஜ.க. வினருக்கு நாற்காலிகள் இல்லாததால் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். அதே போன்று தி.மு.க.வினரும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்களுக்குள் தளளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் ரெயில்நிலைத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்