பூட்டி கிடக்கும் பூசாரிபட்டி கிராம சேவை மையம்

பூட்டி கிடக்கும் பூசாரிபட்டி கிராம சேவை மையத்தை திறப்பது எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-06-04 23:00 GMT

நெகமம்

பூட்டி கிடக்கும் பூசாரிபட்டி கிராம சேவை மையத்தை திறப்பது எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சான்றிதழ்கள்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் பூசாரிபட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.17 லட்சம் செலவில் 2015-2016-ம் ஆண்டு கிராம சேவை மையம் கட்டப்பட்டது. இங்கு பட்டா சிட்டா நகல் எடுத்தல், கணினி சேவை, அனைத்து சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட வசதிகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், கிராம சேவை மையம் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டு இருக்கிறது. கட்டிடம் கட்டி 6 ஆண்டுகளை கடந்தும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் கிடக்கிறது. இதனால் அந்த மையத்தை சுற்றி புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. மேலும் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் நெகமம் செல்லும் சாலையில் உள்ள கிராம சேவை மையம் பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது.

திறக்க வேண்டும்

ேமலும் பகலில் புதிய கட்டிடத்தில் நாய்கள் ஓய்வெடுப்பது வாடிக்கையாகி விட்டது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய கட்டிடத்தை ஆய்வு செய்து, அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பூசாரிபட்டியில் கிராம சேவை மையம் கட்டி பல ஆண்டுகளை கடந்தும் இதுவரை திறக்கப்பட வில்லை. இதனால் கட்டிடத்தை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் மையத்திற்கு செல்ல வழி எங்கே என தேடும் நிலை உள்ளது. ஆகவே, கட்டிடத்தை சுற்றிலும் வளர்ந்து உள்ள புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மேலும் கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்