ஒளிலாயத்தில் பவுர்ணமி வழிபாடு

சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில் பவுர்ணமி வழிபாடு நடந்தது

Update: 2023-05-07 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில் 18 சித்தர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம், அதன்படி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஒளிலாயத்திலுள்ள 18 சித்தர்களுக்கும் சிறப்பு வழிபாடும். அதனைத் தொடர்ந்து மகா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல தில்லைவிடங்கன் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்