கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

Update: 2023-07-03 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5.30 மணியளவில் கழுகுமலை பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டவாறு கிரிவலம் வந்தனர். இதில் கழுகுமலயை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 7 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்