காங்கயம் பகுதியில் பெய்த மழையால் செம்மறி ஆடுகளுக்கு கொழுக்கட்டை புற்கள் உணவாகிறது. இதனால் தீவன தட்டுப்பாடு குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கொழுக்கட்டை புற்கள்
காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி விவசாயிகளுக்கு செம்மறி ஆடு வளர்ப்பு முக்கிய தொழிலாக கருத்தப்படுகிறது. குறிப்பாக ஊதியூர், வட்டமலை, பாப்பினி, செங்கோடம்பாளையம் ஆகிய பகுதிகளில் செம்மறி ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது.
மேலும் தங்கள் மேச்சல் நிலங்களில் ஆட்டுப்பட்டிகள் அமைத்து அதில் 20 முதல் 40 வரைக்கும் செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் மேச்சல் நிலங்கள், கிணறுகள், ஏரிகள், சாலையோரங்கள் ஆகிய இடங்களில் மேய்ச்சல் புற்களான கொழுக்கட்டைபுற்கள் செழித்து வளர்ந்துள்ளது.
தீவன பற்றாக்குறை
இதனால் ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை தீர்ந்துள்ளது. மேலும் தற்போது செம்மறி ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் கிடைப்பதால் ஒரே ஈற்றில் 2 குட்டிகள் வரை போடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் செம்மறி ஆடுகள் வளர்த்து வரும் எங்களுக்கு ஓரளவு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.