தூய்மை திருவிழா உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

தலைஞாயிறு பேரூராட்சியில் தூய்மை திருவிழா உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-03-31 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை திருவிழா உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார்.இளநிலை உதவியாளர் கோவிந்தம்மாள் முன்னிலை வகித்தார். தூய்மை பணி மேற்பார்வையாளர் அகிலா, பேரூராட்சி பணியாளர்கள் அன்பு, சவுந்தர், சரவணன் மற்றும் தூய்மை பணியாளர்கள் பரப்புரையாளர்கள் உள்பட பலர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்