அட்சயலிங்க சாமி கோவிலில் தூய்மைப்பணி

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் தூய்மைப்பணி;

Update: 2023-08-23 18:45 GMT

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள அட்சயலிங்க சாமி கோவிலில் தூய்மைப்பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை ஆணைப்படி அட்சயலிங்க சாமி கோவில், வெளி பிரகாரம், உள் பிரகாரம், சன்னதி உள்ளிட்ட இடங்களில் கோவில் பணியாளர்கள் சுத்தம் செய்து தூய்மை செய்தனர். இதேபோல் கீழ்வேளூரில் உள்ள அனந்தீஸ்வரர் சாமி கோவில், அழகிய மணவாள அய்யனார் கோவில், யாதவ நாராயண பெருமாள் கோவில், வலிவலம் இருதய கமலநாத சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தூய்மை பணி நடந்தது. இந்த தூய்மை பணியினை கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்பார்வை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்