புரவி எடுப்பு விழா

மேலூர் அருகே புரவி எடுப்பு விழா நடந்தது.

Update: 2022-06-13 20:25 GMT

மேலூர், 

மேலூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் ஹரிஹர புத்திரசாத்தை அய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாத புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு குதிரை வடிவிலான புரவிகளை நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். கீழவளவு அருகில் உள்ள இ.மலம்பட்டியில் ஏராளமான புரவிகள் செய்யப்பட்டிருந்தன. அங்கிருந்து பாரம்பரிய வழக்கப்படி வழிபாடுகளுடன் புரவிகள் ஊர்வலமாக எடுத்து வந்து சாத்தமங்கலம் மந்தைக்கு முன் வரிசையில் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றது. விடிந்த பின் நேற்று அதிகாலையில் புரவிகள் புறப்பட்டு ஹரிஹர புத்திர சாத்தை அய்யனார் கோவிலுக்கு சென்றடையும். சிங்கம்புணரி, சிவகங்கை, மதுரை பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவையொட்டி 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்