திருச்சியில் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை
திருச்சியில் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற்றது.
ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் தேரோட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதே போல திருச்சியிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சியில் ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற்றது. திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கிய இந்த ரதயாத்திரை தில்லைநகர் மக்கள் மன்றம் வரை சென்றடைந்தது. பாரம்பரிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த ரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட இந்த ரத யாத்திரையில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.