மேரக்காய் கொள்முதல் விலை குறைந்தது

கூடலூர் பகுதியில் மேரக்காய் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-28 18:45 GMT

கூடலூர்,

கூடலூர் பகுதியில் மேரக்காய் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேரக்காய்

கூடலூர் தாலுகா பகுதியில் தேயிலை, காபி, குறுமிளகு, இஞ்சி உள்ளிட்ட பயிர்கள் மட்டுமின்றி தட்டைப்பயறு, பாகற்காய், புடலங்காய், அவரை, முள்ளங்கி என பல வகையான காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது. இதேபோல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன், ஜூலை மாதங்களில் நெல் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேரக்காய் விளைச்சல் அதிகரித்தது. தொடர்ந்து கிலோ ரூ.13 வரை விலை கிடைத்தது. இருப்பினும் செலவினங்களை கணக்கில் எடுத்து கொண்டால் கட்டுப்படியாக வில்லை என விவசாயிகள் கூறினர். மேலும் வெளி மார்க்கெட்டுகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரிவித்தனர். இதற்கிடையே தொடர் கனமழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது.

கொள்முதல் விலை குறைந்தது

தற்போது மழை குறைந்து மிதமான தட்ப வெப்பநிலை காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மேரக்காய் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மேலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளதாக கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த காலங்களில் மேரக்காய் கிலோ ரூ.13 வரை விலை கிடைத்தது. பின்னர் ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுகளில் வரத்து அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த வாரம் மேரக்காய் கொள்முதல் விலை கிலோ ரூ.5 ஆக குறைந்தது. தற்போது தேவை அதிகரிப்பால் மேரக்காய் விலை கிலோ ரூ.7 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு ஏற்ற இறக்கத்தால் நிலையான வருவாய் கிடைப்பது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்