புரட்டாசி மாத முதல் சனி திருவிழா

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை புரட்டாசி மாத முதல் சனி திருவிழா நடக்கிறது.

Update: 2023-09-21 17:57 GMT

ஆற்காடு அக்ரகார வீதியில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனி திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு அங்கப்பிரதட்சணம், 4 மணிக்கு திருப்பாவை சேவை, 5 மணிக்கு தோமாலை சேவை, 6 மணி முதல் சர்வ தரிசனம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், புஷ்ப அலங்காரத்தில் மேளதாளத்துடன் பெருமாள் வீதிஉலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராஜேந்திரன், சோமசேகரன், தேவகுமார், சரவணகுமார் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்