பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-ம் சனிக்கிழமை விழா
பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-ம் சனிக்கிழமை விழா நடைபெற்றது.
லத்தேரியை அடுத்த அன்னங்குடி ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல, லத்தேரியில் உள்ள ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் நான்காம் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, லட்சுமி நரசிம்ம பஜனை, அன்னதானம் நடைபெற்றது.