கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட ெபாதுமக்கள்

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட ெபாதுமக்கள்;

Update: 2022-09-10 11:14 GMT

சேவூர்

சேவூர் ஊராட்சி தேவேந்திர நகர், வெண்ணி காடு என்ற இடத்தில் 1996-ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 216 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் பட்டா பெற்றவர்கள் வீடு கட்டி

500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருபவர்கள். இந்த நிலையில் ஒரு வீட்டில் மாதவி என்பவர் தன் வீட்டின் மீது வங்கிக்கடன் பெறுவதற்காக, தங்கள் இடத்தின் மீதான உரிமைச்சான்று வாங்க அவினாசி சார்–பதிவாளர் அலுவலகம் சென்று விண்ணப்பித்துள்ளார். அவரது ஆவணங்களை பார்த்த சார் -பதிவாளர் குறிப்பிட்ட இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. அந்நிலத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என்ற உத்தரவு வந்துள்ளது. எனவே சென்னையில் உள்ள வக்பு வாரிய முதன்மை செயல் அலுவரிடம் தடையில்லா சான்று வாங்கி வர வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இந்த பிரச்சினை தெரிய வந்ததையடுத்து நேற்று சேவூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து சேவூர் நில வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் ராயப்பன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வருவாய் துறைக்கு எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இது குறித்து தாசில்தாரிடம் பேசி, சார்- பதிவாளரிடம் விபரம் பெறப்பட்டு தெரிவிக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்