புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம்
ஆவணி ஞாயிற்றுக்கிழமையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.;
அம்மனுக்கு அலங்காரம்
இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல்நாள் இரவு வந்து கோவிலில் தங்கியிருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு ஆவணிமாதம் ஒவ்வொரு வாரமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். முதல் ஞாயிற்றுக்கிழமை மலர்அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.