புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டம்: 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.ஏ. சிதம்பரம், ஆணையாளர் (பொறுப்பு) செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு கவுன்சிலர்கள் தங்களுடைய வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். பின்னர் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து 16 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.