மாணவர்களின் கல்வியை தடுத்தால் பெற்றோருக்கு கடும் தண்டனை

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வியை பெற்றோர்கள் தடுத்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று தஞ்சை மகளிர் கோர்ட்டு நீதிபதி மணி கூறினார்.

Update: 2022-06-25 19:56 GMT


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வியை பெற்றோர்கள் தடுத்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று தஞ்சை மகளிர் கோர்ட்டு நீதிபதி மணி கூறினார்.

கட்டாய கல்வி சட்டம்

தஞ்சை மாவட்ட தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மானோஜிப்பட்டி அரசினர் ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் வழிகாட்டுதல்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமவுலி தலைமை தாங்கினார்.இதில் கல்வி உரிமைகள் குறித்து தஞ்சை மகளிர் கோர்ட்டு நீதிபதி மணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மாணவர்கள் கல்வியைத் தடுக்கும் பெற்றோர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கடும் தண்டனை விதிக்கப்படும்"என்றார்.

மரக்கன்றுகள் நட்டார்

பின்னர் பள்ளி வளாகத்தில் அவர் மரக்கன்றுகளையும் நட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குறித்து பட்டதாரி ஆசிரியர் சிவானந்தம் பேசினார். முன்னதாக ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ராணி திலகவதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் முருகன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்