பம்ப் ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டம்
வேலூரில் பம்ப் ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேலை செய்யும் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், குமரவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சுகுமாரன், துணைத்தலைவர் அன்பு, துணை செயலாளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் ஒன்றிய பொருளாளர் பட்டாபி வரவேற்றார்.
ஊதிய உயர்வு, வருடத்திற்கு 2 சீருடைகள், டார்ச் லைட் உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தண்டபாணி நன்றி கூறினார்.