புளியங்காட்டூர் வேதவிநாயகர் கோவில் வருசாபிஷேகம்
புளியங்காட்டூர் வேதவிநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடந்தது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள புளியங்காட்டுர் வேத விநாயகர், அம்பாள், கருப்பசாமிக்கு வருடாந்திர கொடை விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் வேத விநாயகருக்கு சிறப்பு பூஜையும் கருப்பசாமி கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடும் நடத்தினர். மாலை 3 மணிக்கு அம்பாளுக்கு பனியார படையுடன் சிறப்பு பூஜையும் இரவு பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. நேற்று வருசாபிஷேகம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோம் மற்றும் கலச பூஜையும் தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் இரவு 8 மணிக்கு கருப்பசாமிக்கு கிடா பூஜையும் இரவு 10மணிக்கு விளையாட்டு போட்டியும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.