புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-07 15:24 GMT

நிரம்பி வழிகிறது

வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும், பாலாறு நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி தமிழக பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அம்பலூர், கொடையாஞ்சி, ஆவரங்குப்பம், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் தண்ணீர் அதிகரித்தால் நிலத்தடி நீர் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் வாணியம்பாடி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.

எச்சரிக்கையாக...

நிம்மியம்பட்டு அரசு மருத்துவமனை பகுதியில் மருத்துவமனைக்குள் போக முடியாத அளவு சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. நகரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மாலை 6 மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்மழை காரணமாக இப்பகுதிகளில் குளிர்ச்சி நிலவுகிறது.

பாலாற்று பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் ஆற்று ஓரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்